சைலேந்திரபாபு IPS க்கு கூடுதலாக சுகாதாரத் துறை செயலாளர் பதவியும் ஒதுக்கினால் என்ன?

DGP முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து Covid deaths க்கு 25 இலட்சமும், Non- Covid deaths க்கு 5 இலட்சமும் வாங்கித் தருகிறார். அவர் கேட்டவுடனேயே Finance Secretary அள்ளிக் கொடுத்து விடுவாரா என்ன? நிச்சயம் சைலேந்திரபாபு நிறைய போராடியிருப்பார். அது தனக்கு கீழ் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் மீது ஒரு உயரதிகாரிக்கு இருக்க வேண்டிய அக்கறையையும், அன்பையும், பிறரது கஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளும் empathy ஐயும் காட்டுகிறது.

🔥ஆனால் இப்போது இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர்/ செயலாளர்/ DME/DMS/ DPH அப்படியா இருக்கிறார்கள்?

🔥ஒரு ஏழை மருத்துவரின் அன்பு மனைவி திவ்யாவின் கதறலை நேரிலும், வீடியோவிலும் பார்த்த பின்னரும் தன் மகளாக திவ்யா விவேகானந்தனைப் பார்க்கும் மனசு இவர்களுக்கு இல்லை.

🔥ஒரு DGP யால் 25 இலட்சம் வாங்கித் தர முடிகிறது. ஆனால் இந்த அமைச்சரால் ஒரு இளநிலை உதவியாளர் வேலைக் கூட வாங்கித் தர முடியவில்லை. அது மட்டுமா? கோவிட்டால் இறந்து போன 11 அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு பத்து பைசா கூட வாங்கித் தர முடியவில்லை. Non- Covid deaths எத்தனை பேர் என்பது கூட இந்த ஐந்து பேருக்கும் தெரிவதில்லை.

ஏனென்றால்…?

இவர்கள் ஐவருக்கும் அரசு மருத்துவர்களுக்கோ/ அவர்களது குடும்பங்களுக்கோ கடுகளாவாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

🔥தன்னுடைய DME சேம்பரிலேயே கொஞ்சம் கூட வெட்கமோ பதட்டமோ இல்லாமல், ஒரு பெண் மருத்துவரிடம் ஐந்து லட்சம் கையூட்டு கேட்பதற்கு மட்டும் கூச்சப்படுவதில்லை.

இந்த அவல நிலையை மாற்ற தமிழக அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழுவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை.

மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் நாடகமாடி வரும் இந்த போலி மக்கள் சேவகர்களை எதிர்த்துக் களம் காண்போம்.

களம் : வள்ளுவர் கோட்டம், சென்னை

நாள் : 28.9.22 காலை 9 AM

வழிப்போக்கன்✊