Blogs

Backdoor entry in IOA, GRH, Madurai

இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வன வாசமா? 🔥அரசு ஆணை 354 ன் கதி என்ன எனக் கேட்டால் 17b 🔥 மதுரை Anaesthesia department ல் ஆறு பேரை 26.02.2021 கவுன்சிலிங் நடத்தி போட்டேன் - இது DME. இல்லை. அவர்கள் அனைவரும் கள்ளத்தனமாக 2020 லேயே join பண்ணி விட்டார்கள் - இது மதுரை டீன்....

Dr. Thiruvenkadam.M

1. 2009-ல் அது எப்படி பீகாரை விட நமது அரசு மருத்துவர்கள் குறைவாக சம்பளம் வாங்கலாம் என்று வெளிப்படையாக அன்றைய முதல்வர் கலைஞர் கேட்டாரா இல்லையா? 2. அதன் பின் நடந்த பல்வேறு விவாதங்கள் மற்றும் Committee ஆய்வுகளுக்கு பின்பு தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே அரசாணை 354 என்பதை...

PHC (MBBS) மருத்துவர்களின் மீது மெய்யன்பு காட்டுவது யார்?🤔

LCC ல் office bearers ஆக இருக்கும் அனைவரும் முறைப்படி கட்டாய கிராமப்புற சேவை செய்து, அங்கு DDHS என்ற குறுநில மன்னர்களிடம் அடிபட்டு மிதிபட்டு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி,மனசெல்லாம் நொந்து...3 to 5 வருடங்கள் கழித்து, அதன் பிறகும் direct ஆக DME பக்கம் என்ட்ரி கொடுக்க...

சைலேந்திரபாபு IPS க்கு கூடுதலாக சுகாதாரத் துறை செயலாளர் பதவியும் ஒதுக்கினால் என்ன?

சைலேந்திரபாபு IPS க்கு கூடுதலாக சுகாதாரத் துறை செயலாளர் பதவியும் ஒதுக்கினால் என்ன? DGP முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து Covid deaths க்கு 25 இலட்சமும், Non- Covid deaths க்கு 5 இலட்சமும் வாங்கித் தருகிறார். அவர் கேட்டவுடனேயே Finance Secretary அள்ளிக் கொடுத்து...

தன்னுடைய பணிக்காலத்தில் DME திரு. நாராயண பாபு அரசு மருத்துவர்களின் Role model ஆக இருந்தாரா? 🤔

தன்னுடைய பணிக்காலத்தில் DME திரு. நாராயண பாபு அரசு மருத்துவர்களின் Role model ஆக இருந்தாரா? 🤔 🔥 One colleague has asked Passer-by when will be the Asst.prof to Associate counselling which is already delayed by one year. If one year is lost, unnecessarily one year...

போர்க்களம்🔥

"354 ஐ அமல்படுத்த சிறிதும் விருப்பமில்லை" அதிமுக உதடுகள் = சொல்வது ஒன்று மனதில் நினைப்பது = வேறொன்று வெளியில் = பேச்சு வார்த்தை எனும் நாடகம் நீதிமன்றத்தில் = 354 முடியவே முடியாது. திமுக நெஞ்சில் குத்துவது = எதிரி முதுகில் குத்துவது = துரோகி...

பயணக் குறிப்பு-20.9.22

மாண்புமிகு மாண்புமிகு மாண்புமிகு ஆன்டன் அவர்களுக்கு, தங்களது மேன்மை தாங்கிய சமூகத்திற்கு வழிப்போக்கனின் நூறாயிரம் மாண்புமிகு வணக்கங்கள். 🔥 GO 293 ல் இனி மேல் DACP கேட்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதாக திரும்பத் திரும்ப சொல்லி வருகிறீர்கள். அப்படி எங்கு...

நாம் தமிழர் கட்சி ஆதரவு

வரும் 28.9.22 புதன் கிழமை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை பத்து மணி முதல் ஐந்து மணி வரை நடை பெற உள்ள உண்ணா விரத அறப் போருக்கு ஆதரவு பெருகி வருகிறது [gallery...

இறந்த ஒரு தலைவரின் நினைவிடத்தில் மௌனப் போராட்டம் நடத்துவது என்பது நடைமுறையில உள்ள ஒன்று தான்.

ஆனால் …

இறந்த தலைவரை உயிர் பெற்று வரக் கோருவது என்பது விஞ்ஞானப்பூர்வமற்ற ஒரு செயல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

எனினும் …

அவ்வாறு முறையிடுவது என்பது அவரது பெயரால் ஆட்சி நடத்துவோரை மிருதுவாக, நெஞ்சை வருடும் வகையில் 💦….. விமர்சனம் செய்வதற்காகத் தான்…என்பதை தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?

மேலும் மூச்சுக்கு முன்னூறு முறை “கலைஞர் ! கலைஞர்” என்று கூவிக் கொண்டு, அவரது அரசு ஆணை 354 க்கும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்பான நடத்தைக்கும், நேர் விரோதமாக, ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்…. துரைமுருகன், மா.சு. போன்றவர்களை கண்டிக்காமல், பெண் மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வைக்காமல் ஆட்சி நடத்துபவர்களுக்கு இதை விட தர்மசங்கடம் வேறென்ன வேண்டும்?

வழிப்போக்கன்✊

சட்டப் போராட்டக் குழு தொடர்ந்த வழக்கில் சுகாதாரத் துறை செயலாளர் கள்ள மௌனம் – நீதிமன்றம் கண்டிப்பு. 🔥

நேற்று 27.10.22 சகோதரி திவ்யா போன் பண்ணி வழிப்போக்கனிடம் “கேஸ், என்ன சார் ஆச்சு?” என்று ஆவலுடன் கேட்டார்.

“நவம்பர் 18 ந்தேதிக்கு அரசு வாய்தா வாங்கிடுச்சும்மா!” என்று நாம் பதில் சொன்னவுடன் திவ்யாவின் மெதுவான விசும்பல் சத்தம் 💦 கேட்டது.

நமக்கு, என்ன சொல்றதுன்னு தெரியலை. பரவாயில்லை திவ்யா. தைரியமா இரு. அன்னக்கு மட்டும் அரசு மீண்டும் பம்முச்சுன்னா, நீதியரசர் உத்தரவு போட வேண்டியதிருக்கும் னு கண்டிப்பாக சொல்லிட்டார்மா…என்று நாம் மென்மையாக எடுத்துச் சொன்னோம்.

திவ்யா, “சரிங்க சார். பாத்துக்கலாம்” , னு சொன்னப்ப அவரது குரல் சுரத்தே இல்லாமல் இருந்தது.

நயன்தாராவின் மனசு கஷ்டப்படுதே என்று தூக்கம் வராமல், புலம்பித் தவிக்கும் அமைச்சருக்கு, ஒரு ஏழை மருத்துவரின் மனைவி சிந்தும் கண்ணீர் எங்கே புரியப் போகிறது?😔

இவரெல்லாம் மக்கள் சேவகராம்……!

வழிப்போக்கன் 💦💥