இம் என்றால் சிறைவாசம்.
ஏன் என்றால் வன வாசமா?
🔥அரசு ஆணை 354 ன் கதி என்ன எனக் கேட்டால் 17b
🔥 மதுரை Anaesthesia department ல் ஆறு பேரை 26.02.2021 கவுன்சிலிங் நடத்தி போட்டேன் – இது DME.
இல்லை. அவர்கள் அனைவரும் கள்ளத்தனமாக 2020 லேயே join பண்ணி விட்டார்கள் – இது மதுரை டீன்.
இதை DVAC கிட்ட கொண்டு போனால் 17b
🔥 Transfer counselling ல் நடந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்டால் 17b.
🔥 Illegal promotion ஐ NMC ன் கவனத்திற்கு கொண்டு போனால் 17b.
🔥 மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டால் (மறைமுகமாக withdraw பண்ணச் சொல்லி) 17b.
🔥கலைஞரின் சமாதியிலேயே எழுந்து வா தலைவா! என நீங்கள் பண்ணும் அநீதிகளை முறையிடத் திட்டமிட்டால் 17b.
🔥 இன்னும் எத்தனை 17b கொடுப்பீர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களே ?!
🔥17b என்றவுடன் அலறியடித்துக்கொண்டு வந்து உங்களிடம் சரணடைவோம், அதைக் கிளியர் பண்ணுவதற்காக உங்களிடம் பம்மி விடுவோம், நடையாய் நடப்போம், Push வைப்போம், கண்ணீர் விட்டுக் கதறுவோம்…..etc etc.. என்றெல்லாம் எதிர்பார்க்கிறீர்களா அமைச்சர் அவர்களே!
உங்கள் எதிர்பார்ப்பு நடக்குமா?
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா?
“Every action has an equal and opposite reaction” – Newton’s third law ✊✊✊
நீதியின் பாதையில் செல்லும் சட்டப் போராட்டக் குழு… வழிப்போக்கன்
